science

img

சனி கிரகத்தை சுற்றும் அதிக நிலவுகள் - மேலும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

வியாழனை விட அதிக நிலவுகள் உள்ள கிரகம் சனி என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளது. இது விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்ததி உள்ளது. 
சனி கிரகத்தை சுற்றி இருபது புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சனி கிரகத்திற்கு மொத்தம் 82 நிலவுகள்(துணைக்கோள்கள்) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். 
கார்னகி இன்ஸ்டிடியூஷன் பார் சயின்ஸ்  நிறுவனத்தின் வானியலாளர்  ஷெப்பர்டும் அவரது குழுவும்  ஹவாய் தீவில்  ஒரு  நவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனியின் 20 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்து உள்ளனர். 

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகமான வியாழன்  மட்டுமே  மிகப்பெரிய சந்திரனைக் கொண்டுள்ளது. வியாழனின்  மிகப்பெரிய நிலவின் அளவு பூமியின் கிட்டத்தட்ட பாதி அளவு ஆகும். இதற்கு நேர்மாறாக, சனியின் 20 புதிய நிலவுகள் மிக சிறியவையாகும்  அவை ஒவ்வொன்றும் 5 கிலோ மீட்டர் விட்டம் கொண்டுள்ளது. 
ஷெப்பர்ட்டின் கூற்றுப்படி, சனியைச் சுற்றி 5 கிலோமீட்டர் மற்றும் வியாழனைச் சுற்றி 1.6 கிலோ மீட்டர்  விட்டம் உடைய சிறியதாக இருக்கும் நிலவின் பட்டியலை வானியலாளர்கள் வைத்து உள்ளனர். இந்த  சிறிய நிலவுகளை ஆராய எதிர்காலத்தில்  பெரிய தொலைநோக்கிகள் தேவைப்படும்.

வானியலாளர் ஸ்காட் ஷெப்பர்ட்  கூறும் போது  "சனிக்கிரகம்  உண்மையான நிலவுகளின்  ராஜா என்பதைக் கண்டுபிடித்தது வேடிக்கையாக இருந்தது.  சுமார் 100 டைனியர் நிலவுகள் கூட சனியைச் சுற்றி வருகின்றன, அவை இன்னும் கண்டுபிடிக்க காத்திருக்கின்றன.

வியாழனை விட சனியைச் சுற்றி உள்ள  நிலவுகளைக் கண்டுபிடிப்பது மிக கடினம் ஏன் என்றால்  சனிகிரகம்  அவ்வளவு தூரம்   உள்ளது. இந்த நிலவுகள் கிரகங்களை உருவாக்க உதவிய பொருட்களின் எச்சங்கள் ஆகும்.  எனவே அவற்றைப் ஆய்வு செய்வதன்  மூலம், கிரகங்கள் எதில் இருந்து உருவாகின  என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம்  என கூறினார்.
இதற்கு முன்பு வியாழன் கிரகம் 79 நிலவுகளுடன் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

;